கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோயிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக விழா!

கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோயிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக விழா நடைபெற்றது. ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சாமி திருக்கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை…

கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோயிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு
அன்னாபிஷேக விழா நடைபெற்றது.

ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள்
உடனுறை பூவனநாத சாமி திருக்கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.  பின்பு 5.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி,  திருவனந்தல் பூஜையும்,  8 மணிக்கு விளா பூஜையும் நடந்தது.

தொடர்ந்து காலை 10 மணிக்கு சுவாமி சன்னதி முன்பு கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு ஹோமமும் தீபாராதனையும் நடந்தது.  பின்னர் ஹோம குண்டத்திலிருந்து புனித நீர் எடுத்து வலம் வந்து மூலவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

பின்னர் 11 மணிக்கு அன்னாபிஷேகம் மற்றும் தீபாராதனையும் 11.30 மணிக்கு சிறப்பு பூஜையும் நடந்தது.   இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.