கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

தேனி மாவட்டம், கும்பக்கரை அருவியில் தொடரும் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இரண்டாவது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு…

தேனி மாவட்டம், கும்பக்கரை அருவியில் தொடரும் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இரண்டாவது
நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு
பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை, வட்டக்கானல், வெள்ள கெவி உள்ளிட்ட
பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. கனமழையின்
காரணமாக நேற்று முன்தினம் முதல் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு
ஏற்பட்டது.

இதனால், சுற்றுலா பகுதிகளில் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் குளிக்க
தடை விதித்தனர். இந்நிலையில், அருவியில் தொடரும் வெள்ளப்பெருக்கின்
காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க விதிக்கப்பட்ட தடை, இரண்டாவது
நாளாக தொடர்வதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.