ஐந்தருவியில் குளிக்க அனுமதி; சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

நெல்லை குற்றாலம் ஐந்தருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வந்த கனமழையால் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், நேற்று மாலை முதல்…

நெல்லை குற்றாலம் ஐந்தருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வந்த கனமழையால் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், நேற்று மாலை முதல் இன்று காலை வரை சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி போலீசார் அருவியில் குளிப்பதற்கு தடைவிதித்திருந்தனர். இந்நிலையில், இன்று காலை அருவியில் நீர்வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளைக் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்தி: ‘மதுரையில் 1239 பள்ளிகளில் ஆதார் முகாம் நடத்த ஆதார் சேவா கேந்திரா அனுமதி!’

மேலும், மெயின் அருவி, பழைய குற்றாலம் புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் சீரான நீர்வரத்து உள்ளதால் அங்கும் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் செல்வது வழக்கம். அதன்படி இந்த வாரம் அங்குச் செல்ல இருந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.