சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.187 குறைந்துள்ளது.
எரிபொருள் நிறுவமான இந்தியன் ஆயில் நிறுவனம் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. 19 கிலோ கொண்ட வணிக எரிவாயு சிலிண்டர் விலை இன்று முதல் குறைந்துள்ளது. அதன்படி சிலிண்டர் ஒன்று தலைநகர் டெல்லியில் ரூ.198ம், கொல்கத்தாவில் ரூ.182ம், மும்பையில் ரூ.190.50 ஆகவும், சென்னையில் ரூ.187ம் குறைந்தள்ளது.
சென்னையில் வணிக பயன்பாட்டிற்காக சிலிண்டர் விலையானது ரூ.187 விலை குறைந்து ரூ.2186 விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைவு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேசமயம் வீட்டு உயபோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. அதன்படி வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று ரூ.1018.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.








