மதுரையில் 1239 பள்ளிகளில் ஆதார் முகாம் நடத்த ஆதார் சேவா கேந்திரா அனுமதி!

மதுரை மாவட்டத்தில் ஆதார் பதிவு இல்லாத மாணவர்களுக்கு 1239 பள்ளிகளில் ஆதார் முகாம் நடத்தி ஆதார் பதிவு செய்ய ஆதார் சேவா கேந்திரா அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு…

மதுரை மாவட்டத்தில் ஆதார் பதிவு இல்லாத மாணவர்களுக்கு 1239 பள்ளிகளில் ஆதார் முகாம் நடத்தி ஆதார் பதிவு செய்ய ஆதார் சேவா கேந்திரா அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் மற்றும் தனியார்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு எமிஸ் எண் வழங்கப்பட்டு அதில் ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் மதுரை மாவட்டத்தில் உள்ள 2165 பள்ளிகளில் 5,49,620 மாணவர்கள் பயின்று வரும் நிலையில், 1329 பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எமிஸ் இணைப்பில் ஆதார் எண் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அண்மைச் செய்தி: ‘நியூஸ் 7 தமிழின் புதிய முன்னெடுப்பு; “வேண்டாம் போதை” விழிப்புணர்வு நிகழ்ச்சி’

இந்நிலையில், மதுரையில் இயங்கி வரும் மத்திய அரசின் ஆதார் சேவை கேந்திரத்துக்கு மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கா.கார்த்திகா எழுதியுள்ள கடிதத்தில், மதுரை மாவட்டத்தில் 1329 பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எமிஸ் தளத்தில் ஆதார் எண் பதிவேற்றம் செய்யவில்லை. எனவே இந்தப்பள்ளிகளில் ஆதார் பதிவு முகாம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் ஆதார் சேவா கேந்திரா அதிகாரிகள், முதன்மைக்கல்வி அலுவலரின் கடிதத்தைப் பரிசீலித்து 1239 பள்ளிகளிலும் ஆதார் முகாம் நடத்த அனுமதி வழங்கியுள்ளனர். மேலும் முகாம்கள் நடத்துவதற்குரிய தேதியை அறிவித்தால் அந்தத்தேதிகளில் ஆதார் முகாம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.