குற்றாலத்தில் இன்னும் தொடங்காத சீசன் – வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

குற்றாலத்தில் சீசன் எப்போது தொடங்கும் என வியாபாரிகளும் சுற்றுலாப் பயணிகளும் காத்திருக்கின்றனர். தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது குற்றாலம். இங்கு பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் புலியருவி சிற்றருவி உள்ளிட்ட…

குற்றாலத்தில் சீசன் எப்போது தொடங்கும் என வியாபாரிகளும் சுற்றுலாப் பயணிகளும் காத்திருக்கின்றனர்.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது குற்றாலம். இங்கு பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் புலியருவி சிற்றருவி உள்ளிட்ட அருவிகள் உள்ளன. இந்த அருவிகளில் குளிப்பதற்காக நாடெங்கிலும் இருந்து வருடம்தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

குறிப்பாக ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சாரல் சீசன் காலமாகும். இந்த வருடம் ஜூன் மாதம் தொடங்கி 1 வாரம் ஆகியும் இன்னும் சீசன் தொடங்கவில்லை. இதனால் வியாபாரிகளும் மற்றும் சுற்றுலா பயணிகளும் ஏமாற்றம் அடைந்தனர்.

தற்போது குற்றாலம் பகுதிகளில் தற்காலிக கடைகள் அமைக்கும் பணி மும்பரமாக நடைபெற்று நிறைவடைந்த நிலையில், தொடர் விடுமுறை தினங்கள் என்பதால் குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் தண்ணீர் இல்லாததால் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

-சௌம்யா.மோ

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.