தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: முதலமைச்சர் விஜய் தீர்மானம் முன்மொழிந்தார்!

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை முதலில் பாட வேண்டும் என்பதை வலியுறுத்தி முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் பொது பட்ஜெட்டும், இரண்டாவது நாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் இன்றைய கூட்டத்தொடர் தொடங்கியதும் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை முதலில் பாட வேண்டும் என்பதை வலியுறுத்தி முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.

தீர்மானத்தை முன்மொழிந்து அவர் பேசியதாவது, “தமிழ் வெரும் மொழி மட்டுமல்ல அது நம் உயிரி, நம் உணர்வு, தாய் எப்படி புணிதமோ அதேபோலதான் நம் தமிழ்மொழியிம், 1891-ல் மனோன்மணியம் சுந்தரனார் நமது தாய் மொழியை தமிழ்த்தாய் என்று சொல்லி உயர்வாக அபாடினார். மேலும் இந்திய துணைகண்டத்தின் நெற்றியில் வைக்கும் பொட்டு தான் தமிழ் என்றும் பாடினார். தமிழும் தமிழனும் இல்லாத நாடு இல்லை. தமிழ்னா கெத்து; தமிழ்னா பவர், அந்த தமிழின் புகழை சொல்கிற தமிழ்த்தாய் வாழ்த்து, ‘அனைத்துலகும் இன்பமுற’ என்று சொல்கிறதே தவிர எந்த மொழியையும் எந்த தனி நபரையும் அது தாழ்த்தி சொல்வதில்லை. நாம் உயர்த்திப் பிடிக்கிற தமிழை பின்னாடி தள்ளினால் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும், ஒரு கட்சிக்கு பிரச்சினை என்றால் சம்பந்தப்பட்ட கட்சி மட்டும் தான் போராடும்; ஆனால் தமிழுக்கு பிரச்சினை என்றால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் வந்து போராடும்.

ஒட்டுமொத்த இந்தியாவின் பண்முகத்தன்மையை உயர்த்தி பேசுகிர தமிழ்த்தாய் வாழ்த்து நம் தமிழ்நாட்டில் முதல் இடத்தில் தான் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் 1970ம் ஆண்டில் இருந்து அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முதலில் பாடப்படுவது மரபாகவும், அரசாணை மூலமும் பின்பற்றப்பட்டு வருகிறது. 2021-ம் ஆண்டு டிசம்பர் 12 முதல் மாநில பாடலாக அதிகாரபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படும் என்று ஆணையிடப்பட்டது.

இந்த நிலையில், மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால் 2026-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதிய கடிதத்தில், மாநில பாடல் பாடப்படுவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்தின் மரியாதையை பாதுகாப்பதில் தவெக அரசு ஒருபோது சமரசம் செய்யாது. தமிழ் நமது உயிர் மூச்சு; தமிழ் நமது பண்பாடு; தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவது அரசியலமைப்புக்கும், இந்திய ஒருமைப்பாட்டிற்கும் எதிரானது அல்ல; தமிழ்த்தாய் வாழ்த்தின் கண்ணியத்தை காக்கும் வகையில் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படும் என்று முன்மொழிகிறேன்!” இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.