தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!

அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடபட வேண்டும் என்ற தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் விஜய் தமிழ்த்தாய் வாழ்த்தை அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களிலும் முதலில் பாட வேண்டும் என்ற தனி தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இந்த தீர்மானத்தின் மீது பேசிய திமுக எம்.எல்.ஏ கோ.வி,செழியன், “ நீச மொழி என்று பேசப்பட்ட தமிழ்மொழியை தேச மொழியாக்கியது முன்னாள் முதல்வர் கருணாநிதி. உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி உலகிற்கு தமிழின் பெருமையை சொன்னவர் கருணாநிதி, சென்னையில் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை அமைத்தவர் கருணாநிதி. முதலமைச்சர் விஜய் சார்பாக கொண்டு வந்திருக்கிற தமிழ்த்தாய் வாழ்த்து மீதான தனித் தீர்மானத்தை திமுக சார்பாக நான் முன்மொழிகிறேன்” என்று பேசினார்

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி தமிழ்த்தாய் வாழ்த்து மீதான தனித்தீர்மானத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்மொழிந்திருக்கிறார். தமிழ்த்தாய் வாழ்த்து வெறும் பாடல் அல்ல. தமிழ் மொழியின் தொன்மை, பெருமை, பண்பாட்டின் அடையாளம். எனவே இந்த தனித் தீர்மானத்தை அதிமுக சார்பாக நான் முழுமனதோடு ஆதரிக்கிறேன் என்று பேசினார்.

இதனையடுத்து பேசிய சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, “இந்த தீர்மானம் வரலாற்றுச் சிரப்புமிக்க தீர்மானம் என்றும், தமிழ்த்தாய் வாழ்த்து மீதான முதலமைச்சர் விஜய் கொண்டுவந்த தனித் தீர்மானத்தை விசிக ஆதரிக்கிறது என்றும் தெரிவித்தார்.

அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது, “தமிழ்த்தாய் வாழ்த்து வெறும் தமிழ்த்தாய்க்கான வாழ்த்து மட்டுமல்ல; அது உலகத்தாய் வாழ்த்து. தமிழ்த்தாய் வாழ்த்து மீதான தனித் தீர்மானமத்தைக் கொண்டுவந்த முதல்வர் விஜயை இருகரம் கூப்பி வணங்கி வாழ்த்தி, தனித்தீர்மானத்தை வழிமொழிகிறேன்” இவ்வாறு அவர் பேசினார்.

இதேபோல காங்கிர்ஸ், சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் உள்ளிட்ட அனைத்து கட்சிதகளும் தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தன.

இதனையடுத்து பேசிய சபாயநகர் ஜே.சி.டி.பிரபாகர் மிழ்த்தாய் வாழ்த்தை அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களிலும் முதலில் பாட வேண்டும் என்ற தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படுவதாக தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.