ரூ.40-க்கு ஒரு கிலோ தக்காளி – தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாடு அரசின் பசுமை பண்ணை அங்காடிகளில் 40 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யபடுகிறது. தமிழ்நாட்டில் தக்காளி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த கூட்டுறவுத் துறையின் மூலம் செயல்பட்டு வரும் பசுமை பண்ணை நுகர்வோர் அங்காடிகள் மூலம்…

தமிழ்நாடு அரசின் பசுமை பண்ணை அங்காடிகளில் 40 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யபடுகிறது.

தமிழ்நாட்டில் தக்காளி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த கூட்டுறவுத் துறையின் மூலம் செயல்பட்டு வரும் பசுமை பண்ணை நுகர்வோர் அங்காடிகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கனமழை காரணமாக, அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்துள்ளதால் சென்னையில் அதன் சில்லறை விற்பனை விலை ரூ.50 வரை உயா்ந்துள்ளது.

இந்த விலையேற்றத்தால் பொது மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கூட்டுறவுத் துறையால் நடத்தப்படும் பசுமை பண்ணை நுகா்வோர் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளிடம் இருந்து நேரடியாக தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டில் கடந்த 7 நாட்களில் 568 பேர் டெங்குவால் பாதிப்பு – பொது சுகாதாரத்துறை தகவல்!

இந்த தக்காளி தமிழ்நாடு பசுமை பண்ணை நுகர்வோர் கடைகள் மூலம் குறைவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் தமிழ்நாடு அரசின் பசுமை  பண்ணை அங்காடிகளில் 1 கிலோ தக்காளி 40 ரூபாய்க்கு விற்பனை செய்யபடுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.