“இவன் யாரோ” – ‘மழை பிடிக்காத மனிதன்’ பாடல் லிரிக்கல் வீடியோ வெளியீடு!

விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடலான ‘இவன் யாரோ’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.  இசையமைப்பாளராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை துவங்கியவர் விஜய் ஆண்டனி. இவர் தொடர்ந்து நடிகர்,…

விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடலான ‘இவன் யாரோ’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. 

இசையமைப்பாளராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை துவங்கியவர் விஜய் ஆண்டனி. இவர் தொடர்ந்து நடிகர், தயாரிப்பாளர், பாடகர், இயக்குநர் என பன்முகம் காட்டி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘ரோமியோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த திரைப்படத்தின் வசூல் சிறப்பாகவே அமைந்தது.

இதனையடுத்து, விஜய் ஆண்டனி ‘மழை பிடிக்காத மனிதன்’ என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தை கமல் போஹ்ரா, லலிதா, பிரதீப் மற்றும் பன்கஜ் போஹ்லரா இணைந்து தயாரித்துள்ளனர். சில நாட்களுக்கு முன் இந்த  திரைப்படத்தின் சென்சார்ஷிப் போர்ட் U/A சான்றிதழை வழங்கியது. ஆகஸ்ட் 2 ஆம் தேதி ரிலீசாக இருக்கும் இந்த திரைப்படத்தின் டீசரை படக்குழு கடந்த மாதம் வெளியிட்டது.

இதையும் படியுங்கள் : தொடர் மழையால் நிரம்பிய பில்லூர் அணை – பவானி ஆற்றில் 3வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை!

அதைத்தொடர்ந்து படத்தின் இரண்டு பாடல்கள் வெளியானது. படத்தின் டிரைலரும் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் மூன்றாவது பாடலான ‘இவன் யாரோ’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடலுக்கு விஜய் ஆண்டனியே இசையமைத்து பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.