ஒலிம்பிக் போட்டி முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஒலிம்பிக் நீச்சல் போட்டி: இந்திய வீரர்கள் தோல்வி

ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் இந்திய வீரர்கள் ஸ்ரீஹரி நடராஜ் மற்றும் மானா பட்டேல் ஆகியோர் அரை இறுதிப்போட்டிக்கு தகுதிபெறவில்லை.

இன்று மாலையில் ஆடவருக்கான 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் போட்டியில் கலந்து கொண்ட ஸ்ரீஹரி நடராஜ் 100 மீட்டர் தூரத்தை 54.31 நொடிகளில் நீந்தி கடந்து, 5 வது இடத்தை பிடித்தார். இதன் காரணமாக அவர் அரை இறுதிக்கு தேர்வாகவில்லை. இதேபோன்று மகளிர் 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் போட்டியில் கலந்து கொண்ட மானா பட்டேல் 100 மீட்டர் தூரத்தை 1:05 நிமிடத்தில் கடந்து அரை இறுதிக்கு செல்லும் வாய்பை நழுவவிட்டார்.

டோக்கியோவில் 2020 ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியின் முதல்நாளான நேற்று மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில், மீராபாய் சானு கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வாங்கினார். நேற்று மாலை 4.15 மணிக்கு நடந்த 69 கிலோ குத்துச்சண்டை பிரிவுக்கான முதல் சுற்றுலே விகாஸ் கிரிஷன் தோல்வியடைந்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற இந்திய மகளிர் ஹாக்கி போட்டியில், இந்திய அணி தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆடவர் லைட் வெயிட் இரட்டையர் துடுப்பு படகு போட்டியில், இந்தியாவின் அர்ஜுன், அர்விந்த் 3-வது இடம்பிடித்து அரையிறுதிக்கு தேர்வானார். தொடர்ந்து பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் குரூப் சுற்றுப்போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இதைத் தொடர்ந்து மகளிர் இரட்டையர் டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் சானியா மிர்சா-அங்கிதா ரெய்னா அணி உக்ரைன் கிச்நொக் இரட்டையர்களிடம் தோல்வியடைந்தது. இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு ஆடவருக்கான டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு ஆட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டை சேர்ந்த சதயன் ஞானசேகரன் இரண்டாவது சுற்றில் தோல்வியை தழுவினார்.

இதனிடையே, டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் மனிகா பத்ரா இரண்டாவது சுற்றில் அசத்தலான வெற்றியை தன்வசமாக்கினார். மேலும், மகளிர் 59 கிலோ குத்துச்சண்டை போட்டியில் நட்சத்திர வீராங்கனை மேரி கோம், மிகுலினா ஹர்னான்டஸை எளிதில் வீழ்த்தினர். மாலை 4 மணிக்கு நடைபெற்ற ஆண்களுக்கான குத்துச்சண்டையில், 69 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் மணிஷ் கவுசிக் தோல்வியைத் தழுவினார். இதை தொடர்ந்து நடந்த ஆடவர் மற்றும் மகளிருக்கான 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் போட்டியில் இந்திய வீரர்கள் தோல்வியடைந்தனர்.

Advertisement:
SHARE

Related posts

பள்ளி மாணவி பாலியல் வழக்கில் ஒருவர் போக்சோவில் கைது

Gayathri Venkatesan

ஓடிடியில் வெளியாகும் படங்களை திரையிடுவதில்லை என முடிவு

Saravana Kumar

போலி கார்டை பயன்படுத்தி ஏடிஎம்மில் கொள்ளை

Gayathri Venkatesan