முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம்

யார் இந்த பவானி தேவி?


எல்.ரேணுகா தேவி

இந்திய பாரம்பரியத்தில் வாளுக்கும் வெற்றிக்கு பல சரித்திரங்கள் உண்டு. ஆனால் சரித்திரத்தை சமகாலத்தில் சாதனையாக்கியவர் சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வாள் வீச்சு வீராங்கனை பவானிதேவி.

டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் வாள் வீச்சு பிரிவில் தகுதிபெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பொருமையை பெற்றுள்ளார் பவானி தேவி.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சொன்னதை செய்துகாட்டியவர்

இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஐஸ்லாந்தில் நடைபெற்ற சர்வதேச வாள் வீச்சுப் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் ஒட்டு மொத்த தேசத்தையும் தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்தவர். அப்போதே “டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெறுவதுதான் தன்னுடைய இலக்கு” என்றார் பவானி தேவி. அவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சொன்னதை தற்போது நிகழ்த்தியும்காட்டியுள்ளார்.

வாள் வீச்சு போட்டியில் ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கோலோச்சிவரும் நிலையில் வடசென்னையைச் சேர்ந்த பவானி தேவி தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தேர்வுச் செய்யப்பட்டிருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாகும்.

இவர் தண்டையார்பேட்டையிலுள்ள முருக தனுஷ்கோடி பள்ளியில் தொடக்க கல்வி படித்தவர். அப்போது பள்ளியில் புதிதாக வாள் வீச்சு விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. எப்போதும் துருதுருவென இருக்கும் பவானி தேவிக்கு பள்ளியில் அறிமுகமானதுதான் வாள் வீச்சு விளையாட்டு. பவானி வாள் வீச்சை தேர்வுச் செய்த தருணம் அவரது வாழ்க்கைக்கு மட்டுமல்ல இந்திய வாள் வீச்சு விளையாட்டுக்கும் முக்கியமான தருணமாகும்.

3 நிமிடங்கள் தாமதம், முத்திரை பதித்த வெற்றிகள்

பள்ளி அளவிலான வாள் வீச்சுப் போட்டியில் எதிர்பார்க்காத வெற்றிகளைக் குவித்தார். அதுவரை அவருக்கான பயிற்சி செலவுகளை அவரது குடும்பமே கவனித்துவந்தது. இந்தத் தொடர் வெற்றிகளால் கேரள மாநிலம் தலசேரியில் உள்ள இந்திய விளையாட்டுத் துறை பயிற்சி மையத்தில் பயிற்சிபெறும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

இங்கு இந்தியாவின் புகழ்பெற்ற வாள் வீச்சுப் பயிற்சியாளரான சாகர் சுரேஷ் லாகுவிடம் வாள்வீச்சு நுட்பங்களைக் கற்றுத் தேர்ந்தார். கடந்த 2007 துருக்கியில் நடந்த வாள் வீச்சுப் போட்டியின் மூலம் சர்வதேச வாள் வீச்சுப் போட்டிகளில் அறிமுகமானார் பவானி தேவி. ஆனால், அந்தப் போட்டியில் 3 நிமிடம் தாமதமாக வந்ததற்காக அவருக்கு பிளாக் கார்டு (black card)காட்டப்பட்டு விளையாட அனுமதிக்கப்படவில்லை.

புறக்கணிப்பால் சோர்ந்து போய்விடாமல் அதே ஆண்டில் மலேசியாவில் நடந்த காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றார். சர்வதேச அளவில் பவானிக்குக் கிடைத்த முதல் பதக்கம் அது. அதற்கு அடுத்த ஆண்டு பிலிப்பைன்ஸில் நடந்த ஆசிய சாம்பியன் போட்டியில் வெண்கலம் வென்று, தனது முத்திரையை தொடர்வெற்றிகளால் பதித்தார்.

இந்த வெற்றியின் மூலம் உலகத் தரவரிசையில் 93-வது இடத்துக்கு முன்னேறினார் பவானி தேவி. வாள் வீச்சு துறையில் இந்திய வீரர்கள் 100 இடங்களுக்குள் வருவது அபூர்வமானது. பவானிக்கு முன்பிருந்த மூத்த வாள் வீச்சு வீராங்கனைகளான ரீஷா புத்துசேரி, டயானா தேவி ஆகியோர் முறையே 144, 142 இடங்களுக்குத்தான் முன்னேறியுள்ளனர்.

முதல் தங்கம்

2012-ம் ஆண்டில் சிங்கப்பூரில் நடந்த காமன்வெல்த் வெட்டரன் வாள் வீச்சுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆசிய சாம்பியன் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2014-ம் ஆண்டு இத்தாலியில் நடந்த டஸ்கனி போட்டியில் முதலிடம் பெற்றார். சர்வதேசப் போட்டியில் பவானி வென்ற முதல் தங்கம் இதுதான்.

மற்ற போட்டிகளை போல் அல்லாமல் வாள் வீச்சு மிகவும் நுட்பமான விளையாட்டு மட்டுமல்ல அதிக பொருட் செலவுகள் கூடிய விளையாட்டாகும். பிரபலமில்லாத விளையாட்டை மகள் விளையாடினாலும் அவருக்கு உதவியாக பெற்றோர் இருந்துள்ளனர். வாள் வீச்சு பிரிவில் தமிழக பெண் ஒருவர் சாதனைப்படைத்து வருவதை வார இதழின் மூலம் தெரிந்துகொண்ட இயக்குநர் சசிகுமார் பவானி தேவிக்கு அப்போது ரூ. 2 லட்சம் வழங்கி உதவினார்.

பவானி தேவி சர்வதேச விளையாட்டு போட்டிகளில் வென்று கவனம் பெற்றதன் மூலம் தமிழக அரசு அவருக்கு நிதியுதவி அளித்தது. அதேபோல் கோ ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் உதவியும் கிடைத்துள்ளது. இதனால் உலகப் பிரசித்திபெற்ற பயிற்சியாளர்களான அமெரிக்காவின் எட்வார்ட் கோர்ஃபெண்டி, இத்தாலியின் நிக்கோலோ சனோட்டி ஆகியோரிடம் பவானிபயிற்சி எடுத்துள்ளார். இந்தப் பயிற்சி மூலம் சர்வதேசப் போட்டிகளின் சில நுட்பங்களைக் கற்ற பிறகுதான் அவரால் சர்வதேச வெற்றிகளைச் சுவைக்க முடிந்தது.

ஐஸ்லாந்து சர்வதேச போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றதிலிருந்தே டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பதுதான் பவானியின் கனவு. ஆனால் கொரோனா ஊரடங்கு அவரின் கனவை சற்று அசைத்து பார்த்தது. பயிற்சி கூடங்கள் மூடப்பட்டதால் பவானியால் தொடர் பயிற்சியில் ஈடுபட முடியாமல் போனது.

ஆனால் அந்த கடினமான சூழ்நிலையையும் சவாலாக எடுத்தக்கொண்டார். தன்னுடைய வீட்டு மொட்டை மாடியில் செங்கல் மற்றும் கிட் பையை கொண்டு டம்மி உருவம் ஒன்றை செய்து அதில் பவானி பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று வைரலானது. தொடர்ந்து பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக பவானி தேவி அவ்வாறு செய்தார்.

எந்த சூழ்நிலையிலும் பயிற்சியில் இருந்து பின்வாங்காத பவானி தேவி தற்போது வாள் வீச்சு பிரிவில் உலகத் தரவரிசையில் 45-வது இடத்தில் உள்ளார் பவானி தேவி. வாள் வீச்சு விளையாட்டு தரவரிசை பிரிவில் ஆசியா மற்றும் ஓசியானியா பிராந்தியங்களைச் சேர்ந்தோர் டோக்கியோ ஒலிம்பிக்கில் தகுதிபெறுவதற்காக உலக தரவரிசை அடிப்படையில் இரு இடங்கள் இருந்தன.

அதில் ஒருவராக பவானி தேவி தேர்வுச் செய்யப்பட்டார். இதன்முலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள பவானிதேவி தகுதிபெற்றார். இதற்கான அதிகாப்பூர்வ அறிவிப்பு கடந்த ஏப்ரல் 5-ம் தேதி வெளியானது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் பாவனி தேவிக்கு நிதியுதவியாக ரூ.5 லட்சத்தை இன்று வழங்கி கௌரப்படுத்தியுள்ளார்.

தொடக்க பள்ளியில் வாளை பிடித்த கைகள் இன்றும் அதனை சுழற்றிகொண்டிருக்கிறது. “டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதுதான் தனது கனவு” என நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பவானி தேவி சொன்னது நனவாகும் காலம் நெருங்கிவிட்டது. சாதாரன குடும்பத்தில் பிறந்து ,ஒலிம்பிக்கிற்கு முன்னேறி இருக்கும் தமிழகத்து ஜான்சிராணி பவானிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

CA Bhavani Devi, Tokyo Olympic Games, First Indian Fencer to qualify Olympic,

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஜெயலலிதாவின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்- முதல்வர் பழனிசாமி!

Jayapriya

நடிகர் சூரியின் உணவகங்களில் வணிக வரித்துறையினர் சோதனை

EZHILARASAN D

தமிழ்நாட்டில் புதிதாக 1,559 பேருக்கு கொரோனா

Halley Karthik