முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு – இலங்கை கடற்படை மறுப்பு

மிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்று இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

இலங்கைக் கடற்படையின் ஊடகப் பேச்சாளரான கேப்டன் இந்திக்க டி சில்வா இதனை எமது செய்திப்பிரிவிடம் உறுதிசெய்தார்.

பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாகவும், அதிர்ஷ்டவசமாக மீன்பிடிக்க சென்ற 9 மீனவர்கள் உயிர்த்தப்பி கரை சேர்ந்தனர் என்றும் இன்று காலை செய்திகள் வெளியாகி யிருந்தன.

இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மீனவர்களின் விசைப்படகு சேதமடைந்தது என்றும் மீன்பிடி வலைகளை வெட்டி எறிந்து பதட்டத்தை இலங்கை கடற்படை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறப்பட்டது. இந்தச் சம்பவம் பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதகவும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் அப்படியொரு சம்பவம் நடக்கவே இல்லை என்று இலங்கை கடற்படைப் பேச்சாளர் மறுத்துள்ளார். அதோடு, இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி வரும் வெளிநாட்டு மீனவர்களை இலங்கைக் கடற்படை நிச்சயம் கைது செய்யும் என்றும் குறிப்பிட்டார்.

Advertisement:
SHARE

Related posts

மது அருந்த அடிக்கடி பணம் கேட்டு நச்சரித்த நண்பனுக்கு சரமாரி வெட்டு!

Jayapriya

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வேட்புமனு தாக்கல்

Jeba Arul Robinson

’அரசியலுக்கு வர முடியவில்லை’- நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு!

Jayapriya