ஒலிம்பிக் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பல ஆண்டுகளாக ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை…

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பல ஆண்டுகளாக ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய அனைவரையும் தாம் பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காக அவர்கள் மேற்கொண்ட பங்களிப்புகள் மற்றும் முயற்சிகளை எண்ணி நமது தேசம் பெருமிதம் கொள்கிறது என கூறியுள்ளார். சில வாரங்களில் தொடங்கவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டில் கலந்துகொள்ளும் இந்திய குழுவினருக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.