இன்றைய இந்தியா உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்று- மத்தியமைச்சர்

இன்றைய இந்தியா உலகின் சக்தி வாய்ந்த்த நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.  கார்கில் நினைவு தினத்தை முன்னிட்டு ஜம்முவில் பணியின் போது உயிரிழந்த பாதுகாப்புப் படை…

இன்றைய இந்தியா உலகின் சக்தி வாய்ந்த்த நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். 

கார்கில் நினைவு தினத்தை முன்னிட்டு ஜம்முவில் பணியின் போது உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

அப்போது பேசிய அவர், 1962 இல் லடாக்கில் உள்ள எங்கள் பகுதியை சீனா கைப்பற்றியது. அப்போது ஜவஹர்லால் நேரு நமது பிரதமராக இருந்தார். அவருடைய நோக்கத்தை நான் கேள்வி கேட்க மாட்டேன். நோக்கங்கள் நல்லதாக இருக்கலாம். ஆனால் கொள்கைகளுக்கு இது பொருந்தாது. இருப்பினும், இன்றைய இந்தியா உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றாகும்.

நாட்டுக்காக உயிர் நீத்தவர்களை எப்போதும் நினைவு கூர வேண்டும். நமது ராணுவம் எப்போதும் நாட்டிற்காக இந்த உயர்ந்த தியாகத்தை செய்துள்ளது. 1999-ம் ஆண்டு நடந்த போரில் நமது வீரம் மிக்க வீரர்கள் பலர் உயிரிழந்தனர். அவர்களுக்கு தலைவணங்குவதாக கூறினார்.

மேலும், கார்கில் போர் பாதுகாப்புத் துறையில் கூட்டு மற்றும் தன்னம்பிக்கையை அடைய வேண்டிய அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது. போரின் போது கூட்டு கட்டளைகளை அமைத்தல் மற்றும் பாதுகாப்பில் தன்னிறைவு அடைய சீர்திருத்தங்கள் மற்றும் அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் முக்கியமானது என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.