Skip to content
February 16, 2026
News7 Tamil

News7 Tamil

பொறுப்பும் பொதுநலனும்
News7 Tamil
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • LiveT V
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
sortd
Home » important news » presidential election real social justice tamilisai soundararajan
முக்கியச் செய்திகள் தமிழகம்

குடியரசுத்தலைவர் தேர்வு – உண்மையான சமூக நீதி: தமிழிசை சௌந்தரராஜன்

குடியரசுத்தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது உண்மையான சமூக நீதி காக்கப்பட்டுள்ளது என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.   புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான…

Author Avatar

Web Editor

July 24, 20225:54 pm Presidential ElectionReal Social Justicetamilisai soundararajan

குடியரசுத்தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது உண்மையான சமூக நீதி காக்கப்பட்டுள்ளது என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

 

புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு சிலர் அவருக்கு ஆதரவு அளிக்காமல் வாக்களிக்காமல் இருந்ததால் அவர்கள் பெயரளவிற்கு தான் சமூக நீதியை கூறி வருகின்றனர் என்றார். அவர்களின் இந்த செயல் பொதுமக்களிடையே அவர்களின் முகத்தை வெளியே காட்டியுள்ளது என கூறினார்.

 

தேசிய கல்விக் கொள்கையில் தாய் மொழியை ஊக்கப்படுத்துவதற்காக தான் பிரதமர் கொண்டு வந்துள்ளார். புதிய கல்விக் கொள்கையால் இன்னொரு மொழியை மாணவர்கள் கற்றுக் கொள்ள முடியும் என்றுதான் தான் கூறினேன். ஆனால் இந்தியை பற்றி கூறுகிறேன் என்று ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் எனது சமூக வலைதளத்தில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என விளக்கமளித்தார்.


ஒரு சிலர் தமிழகத்தில் ஏன் இவர் வாலை ஆட்டுகிறார் என்று கேட்கிறார்கள். எனது உயிர் தமிழகத்தில் தான் போகும் நான் ஒரு தமிழச்சி. வேறு மாநிலத்திற்கு நான் பணி நிமித்தமாக தான் சென்று இருக்கிறேன். தற்போது கம்பர் ராமனை பற்றி பேசியதாலே கம்பராமாயணம் மட்டுமல்ல கம்பரும் மறைக்கப்படுகிறார். புதுச்சேரியில் துணைநிலை ஆளுநரும் முதலமைச்சரும் இணைந்து பணியாற்றி வருவது முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமிக்கு கோபத்தை ஏற்படுத்தி வருவதாக கூறினார்.

 

தனக்கும் முதலமைச்சருக்கும் எந்த விதமான ஈகோ பிரச்சனையும் கிடையாது. அரசியல் அமைப்பில் ஆளுநருக்கு வேந்தர் என்ற பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது இது அரசியல் ஆக்க கூடாது என்பது தான் எனது கருத்து என்ற தமிழிசை சௌந்தரராஜன், பட்டமளிப்பு விழாவையே அரசியல் ஆக்குகிறார்கள் மாணவர்களுக்கு நல்லதை விதையுங்கள் என தெரிவித்தார்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Read More

‘தனிப்பெரும் கருணை’ என்ற அன்பு வழியை போதித்தவர் வள்ளலார் – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு….!

By Web Editor February 15, 2026

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் ; பிப்.23ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் – தலைமைத் தேர்தல் அதிகாரி….!

By Web Editor February 15, 2026

விஜய் குறித்த சர்ச்சை பேச்சு ; பகிரங்க வருத்தம் தெரிவிக்க வேண்டும் – நயினாருக்கு, ராமதாஸ் வலியுறுத்தல்………!

By Web Editor February 15, 2026

மரியாதை கொடுக்கவில்லையென்றால் திருப்பி அடிப்போம் – திமுகவை விமர்சித்த மாணிக்கம் தாகூர்…….!

By Web Editor February 15, 2026
#ट्रेंडिंग हैशटैग:Presidential ElectionReal Social Justicetamilisai soundararajan

Post navigation

Previous Previous post: தி லெஜண்ட் படத்தின் கன்னட டிரைலர் வெளியீடு
Next Next post: இன்றைய இந்தியா உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்று- மத்தியமைச்சர்
  • About Us
  • Contact us
  • Privacy
  • Advertisement
  • YouTube
  • X
  • Instagram
  • Facebook
  • WhatsApp
© Copyright All right reserved By News7 Tamil WordPress Powered By

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading