சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராம் ரூ.5245 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் குறைந்து, 5,245 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் 5275 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதேபோல சவரன் ஒன்றுக்கு 240 ரூபாய் குறைந்து 41,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு சவரன் 42,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இதனையும் படியுங்கள்: அமெரிக்காவில் கடும் பனிப்புயல் – 1,300க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
மேலும் சுத்தமான தங்கமாக கருதப்படும் 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 33 ரூபாய் குறைந்து 5,722 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கத்தின் நேற்றைய விலை 5755 ரூபாயாகும்
இதனையும் படியுங்கள்: ஃபுல் டேங்க் பெட்ரோல் நிரப்பினால் ஆபத்தா? – வாகனம் வைத்திருப்போர் கவனிக்க வேண்டியவை!
வெள்ளி விலையில் கிராம் ஒன்றுக்கு 50 பைசா குறைந்து 71 ரூபாய் 50 பைசாவுக்கு விற்கப்படுகிறது. அதே போல ஒரு கிலோ வெள்ளி விலை 71,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று ஒரு கிராம் வெள்ளி 72 ரூபாய்க்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
– யாழன்