சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 55 ரூபாய் குறைந்தது.
தங்கம் என்பது நம் வாழ்வில் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. அதிலும் தங்கத்திற்கு பெண்களிடையே இருக்கும் மோகம் என்பது அளவிட முடியாத ஒன்று. இதனால் நாளுக்கு நாள் தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கம் என்பது எதிர்பாராத ஒன்றாகவே மாறிவிட்டது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராம் ஒன்றுக்கு 8 ரூபாய் குறைந்து 5,375 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது . அதே போல சவரன் ஒன்றுக்கு 64 ரூபாய் குறைந்து 43,011 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று சென்னையில் கிராம் ஒன்றுக்கு 55 ரூபாய் குறைந்து , 5,375 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல சவரன் ஒன்றுக்கு 440 ரூபாய் குறைந்து 42,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 5,682 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதே போல் ஒரு கிலோ வெள்ளி விலை 72,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- பி. ஜேம்ஸ் லிசா








