ஷாஹித் கபூர், விஜய் சேதுபதி மற்றும் கே.கே.மேனன் ஆகியோர் நடிப்பில் வெளியான ஃபார்ஸி வெப் தொடர் எப்படி உள்ளது என்பது குறித்த நெட்டிசன்களின் பார்வையை இந்த செய்திக்குறிப்பில் பார்ப்போம்.
இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகேயின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெப் தொடரான ஃபார்ஸி இன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது.
எப்போதும் போல் நெட்டிசன்களின் கருத்துக்கள் வெளியாகி இந்த வெப் தொடர் குறித்த முதல் பார்வையை இணையத்தில் பரவ தொடங்கி விட்டன. ஷாஹித் கபூர், விஜய் சேதுபதி மற்றும் கே.கே.மேனன் ஆகியோர் நடிப்பில் க்ரைம் – த்ரில்லர் ஜானரில் இந்த வெப் தொடர் வெளியாகியுள்ளது.
நள்ளிரவில் வெளியான சில மணி நேரங்களிலேயே பலர் இந்த தொடரைப் பார்த்து தங்களின் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிரத் தொடங்கினர்.
அதில் சிலவற்றை தற்போது பார்ப்போம்:
இந்தத் தொடர் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததாகப் பலர் தெரிவித்தனர். மேலும் மனோஜ் பாஜ்பாய் நடித்த தி ஃபேமிலி மேன் படத்திற்கு இணையாக ஃபார்ஸி உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் சிலர், தி ஃபேமிலி மேன் 2 இன் முக்கியமான கதாபாத்திரங்களில் ஒருவரான செல்லம் சார் இந்தத் தொடரில் தோன்றுகிறார் என்று சில நெட்டிசன்கள் ரகசியத்தைக் கசியவிட்டனர்.
இது ஃபார்ஸியை ராஜ் மற்றும் டிகேயின் க்ரைம் யுனிவர்ஸாக உள்ளது என்றும் தெரிவித்து வருகின்றர். மேலும் பலர் ஃபார்ஸி வெப்சீரிஸுக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுத்து வரும் நிலையில், பலர் இந்த வெப் தொடர் நெட்பிளிக்ஸின் பிரபலமான பிரேக்கிங் பேட் தொடரின் காப்பி என கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், ஃபார்ஸி வெப் தொடர் மிகவும் நீளமாக இருப்பதாகவும் நீளத்தை குறைத்திருந்தால் சற்று சலிப்பு இல்லாமல் இருந்திருக்கும் எனவும் பல ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். குறிப்பாக விஜய் சேதுபதியின் நடிப்பை பலர் பாராட்டி வருகின்றனர்.







