இன்று குடிமைப் பணி முதல் நிலைத் தேர்வு

மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 20 குடிமைப் பணிகளுக்கான 1,011 இடங்களுக்கான முதல் நிலைத் தேர்வு இன்று நடைபெறுகிறது. 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில்,…

மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 20 குடிமைப் பணிகளுக்கான 1,011 இடங்களுக்கான முதல் நிலைத் தேர்வு இன்று நடைபெறுகிறது.

10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில், நாடு முழுவதும் 77 இடங்களில் காலை 09:30 – 11:30 மற்றும் 02:30 – 04:30 என இரு வேளைகளாக தேர்வு நடைபெறுகிறது. இந்தத் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் நிலையில் கடந்த ஆண்டிற்கான தேர்வு முடிவுகள் சில நாட்களுக்கு முன் வெளியானது. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான தேர்வு இன்று நடைபெற இருக்கிறது.

சென்னையில் 68 தேர்வு மையங்களில் 25 ஆயிரம் பேர் குடிமைப் பணி முதல் நிலைத் தேர்வு எழுதுகின்றனர். புதுச்சேரியில் 9 மையங்களில் 3,115 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வில் பங்கேற்கும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். முகக் கவசம் அணியாதவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தங்களுக்கான கிருமி நாசினி திரவத்தை தெளிவான பாட்டில்களில் கொண்டு வர வேண்டும். மத்திய அசு நடத்தும் தேர்வு என்பதால் தேர்வர்களுக்கான அறிவுறுத்தல்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டிருந்தன.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.