கல் குவாரிகளை நடத்த வழங்கப்படும் அனுமதியில் உள்ள முறைகேடுகளை களைய வேண்டுமென எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 15 நாட்கள் அல்லது ஒரு மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்பட்டு வந்த கல் குவாரி உரிமையாளர்களுக்கான அனுமதி, கடந்த 2 மாதங்களாக, 3 நாட்களுக்கு ஒருமுறை என மாற்றப்பட்டுள்ளதாகவும், இதனால் கல் குவாரி உரிமையாளர்களும், ஜல்லி வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த முறையை உடனடியாக மாற்றி, பழையபடி, 15 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது மாதத்திற்கு ஒரு முறையோ அனுமதி வழங்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், காலாவதியான கல் குவாரிகளில் எவ்வித அனுமதியுமின்றி, ஜல்லி உற்பத்தி, விற்பனை செய்வதை அனுமதிக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்,
கல் குவாரிகள் மூலம் வர வேண்டிய வருவாய் முழுவதும் அரசின் கருவூலத்திற்கு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.