முக்கியச் செய்திகள் குற்றம்

யூ டியூபர் மாரிதாஸ் வழக்கு ரத்து; சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அவதூறு பிரச்சாரம் செய்த வழக்கில், யூ டியூபர் மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், மாநில அரசுக்கு எதிராகவும், முப்படைகளின் தலைமைத் தளபதி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த விவகாரத்தில் யூடிப்பர் மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார் .

இதனைத்தொடர்ந்து அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக மாரிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் தம் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மாரிதாஸ் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசியல் சூழ்ச்சியுடன் மாரிதாஸ் கருத்து பதிவிட்டதாக தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. மாரிதாஸ் YouTuber Maridhasதரப்பில் கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் கருத்து தெரிவித்ததாக வாதம் முன்வைக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மரணம் தொடர்பாக சந்தேகம் எழுப்பிய சுப்பிரமணிய சாமி மீது வழக்குப் பதியபட்டதா என கேள்வி எழுப்பினார்.

இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து மாரிதாஸ் மீது தமிழ்நாடு அரசு வழக்குப் பதிந்த சட்டப்பிரிவுகள் செல்லாது என கூறி அவர் மீதான வழக்கை இன்று ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் தொடர்ந்த வழக்கில், யூ டியூபர் மாரிதாசை வரும் 27-ஆம் தேதி வரை, நீதிமன்ற காவலில் அடைக்க, நேற்று சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத்தொடர்ந்ந்து, அவர் நீதிமன்ற காவலில், புழல் சிறையில் அடைக்கப்படுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக நிர்வாகி சரவணன், பாஜகவினர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை சட்டப்படி சந்திப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

மழை நீர் தேங்கிய குடியிருப்பு பகுதிகளுக்கு உதவிட; ரிமோட் படகு அறிமுகம்

Ezhilarasan

திருப்பத்தூரில் அரசு மருத்துவக்கல்லூரி:ஸ்டாலின்

எல்.ரேணுகாதேவி

Silhouette Photography மூலம் இணையத்தை கலக்கும் இளைஞர்!

Jayapriya