முக்கியச் செய்திகள் கொரோனா

நைஜீரியாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த நபரின் மரபணுவில் ஒமிக்ரான் இருக்கலாம்; அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நைஜீரியாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியானதில், அவரது மரபணுவில் ஒமிக்ரான் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில், கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 41 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, நைஜீரியாவில் இருந்து வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவரது மரபணுவில் மாற்றம் உள்ளதால், ஒமிக்ரான் இருப்பதாக சந்தேகிக்கபப்டுவதாகவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, அவர் குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கும் எஸ்-ஜீன் குறைவாக இருப்பதாகவும், அவர்களுக்கு ஒமிக்ரான் இருக்க வாய்ப்புள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

தொலைநோக்கு சிந்தனை கொண்டவர் பிரதமர் மோடி; எல்.முருகன்

Saravana Kumar

கடல்சார் மீன்வள மசோதாவை தாக்கல் செய்ய வேண்டாம்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

Gayathri Venkatesan

ஓசூர் அருகே முகாமிட்டுள்ள யானைக் கூட்டம்: வனத்துறை எச்சரிக்கை

Halley Karthik