மாநில,மாவட்ட அளவில் பசுமைக்குழுக்கள்: தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தும் விதமாக மாநில, மாவட்ட அளவில் பசுமைக்குழுக்கள் அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்…

தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தும் விதமாக மாநில, மாவட்ட அளவில் பசுமைக்குழுக்கள் அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது, “மரம் வெட்டுவதை ஒழுங்குபடுத்துவதற்கும், பொது நிலங்கள் மற்றும் பொது அலுவலகங்களில் மரம் நடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பசுமைக் குழு அமைத்து இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் துறை செயலாளரைத் தலைவராகக் கொண்டு 10 பேர் கொண்ட மாநில பசுமைக்குழு அமைக்கப்பட்டுள்ளதுடன், மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்டு 6 பேர் கொண்ட குழுக்கள் மாவட்ட வாரியாக அமைக்கப்படவும் உள்ளது.

இக்குழு பொது நிலங்களிலும், அலுவலகங்களிலும் மரங்களைப் பாதுகாக்க மாவட்ட பசுமைக் குழுக்களுக்குத் திட்டங்களை வழங்குவதுடன், பொது நிலங்களிலும், நிற்கும் / விழுந்த மரங்களை வெட்ட / அகற்ற திட்டங்களை வழங்கும்.

தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்கள் மற்றும் வனப்பகுதியில் மரங்களை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதுடன், மரம் நடவு செய்வதற்கான வருடாந்திர திட்டத்தைத் தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.