சட்டமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு தகவல்

காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை விதிகள் குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று நடைபெற்றது. அதில், முதலமைச்சர் ஸ்டாலின், தளவாய் சுந்தரம், வானதி சீனிவாசன்,…

காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை விதிகள் குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று நடைபெற்றது. அதில், முதலமைச்சர் ஸ்டாலின், தளவாய் சுந்தரம், வானதி சீனிவாசன், முனிரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர், சட்டப்பேரவையில் காகிதமில்லா நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு டேப்லட் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

வரலாற்று சிறப்புமிக்க இ பட்ஜெட், காகிதமில்லா பட்ஜெட் குறித்து பேசியிருக்கிறோம் என்ற அவர், “அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பயிற்சி அளித்து, படிப்படியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். மேலும், ஜெய்ஹிந்த் விவகாரம் தொடர்பான கேள்விக்கு, “ ஜெய்ஹிந்த் சட்டப்பேரவையில் பேசப்பட்ட விவகாரம், பொதுவெளியில் விவாதிக்க வேண்டியதில்லை” என்றும் சபாநாயகர் அப்பாவு பதிலளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.