தனியார் ஆம்புலன்ஸ்கான அரசு தொகை எவ்வளவு?

தமிழகத்தில் நோயாளிகளை அழைத்துச் செல்லும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு தமிழக அரசு கட்டணம் நிர்ணயித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ஆக்சிஜன் வசதியுள்ள ஆம்புலன்ஸில் 10 கிலோ மீட்டர்…

தமிழகத்தில் நோயாளிகளை அழைத்துச் செல்லும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு தமிழக அரசு கட்டணம் நிர்ணயித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ஆக்சிஜன் வசதியுள்ள ஆம்புலன்ஸில் 10 கிலோ மீட்டர் வரை பயணிக்க 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும். 10 கிலோ மீட்டருக்கு மேல் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் தலா 50 ரூபாய் கட்டணமாக பெற்றுக் கொள்ளலாம் .

சாதாரண ஆம்புலன்சுகளில் 10 கிலோ மீட்டர் வரை செல்ல 1,500 ரூபாய் வரையும் அதற்கு மேல் செல்ல ஒவ்வொரு கிலோமீட்டக்கும் தலா ரூ. 25 என்றும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸில் 10 கிலோ மீட்டர் வரை 4 ஆயிரம் ரூபாயும், அதற்கு மேல் ஒவ்வொரு கிலோமீட்டக்கும் தலா 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.


சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.