முக்கியச் செய்திகள் தமிழகம்

15 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு

15 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகச் சட்டமன்ற தேர்தலில் 159 இடங்களில் வெற்றிபெற்று திமுக ஆட்சியமைத்தது. திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த 7 ஆம் தேதி முதல்வராக பதவியேற்றார். இதைத்தொடர்ந்து அவரது தனி செயலாளராக 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது 15 ஐபிஎஸ் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆயுதப்படை ஏடிஜிபியாக ஜெய்ந்த் முரளி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக ஆபாஷ்குமார், சென்னை டிஜிபி அலுவலகம் நிர்வாகப்பிரிவு உதவி ஐ.ஜி.யாக பி.சரவணன், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலாளராக ஹெச்.எம். ஜெயராமன் நியமனம் செய்யப்பட்டார். சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக ஆர். தினகரன், சென்னை ஆயுதப்படை ஐ.ஜி.யாக ஜெ.லோகநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்துறை தொழில்நுட்பப் பிரிவு டிஐஜி-யாக எஸ்.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலம் நகர குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையாக ப.மூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி காவலர் பயிற்சிப் பள்ளி முதல்வராக எஸ்.செந்தில், தமிழ்நாடு போலீஸ் அகடாமியின் தலைவராக டிஜிபி பிலிப் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மண்டல அமலாக்கப்பிரிவு எஸ்.பி.யாக எஸ்.எஸ். மகேஸ்வரனும், சென்னை டிஜிபி அலுவலகம் சட்ட ஒழுங்கு உதவி ஐ.ஜி.யாக அருளரசு, சென்னை பெண்கள்- குழந்தைகள் குற்றத்தடுப்பு எஸ்.பி.யாக டி.பி. சுரேஷ்குமர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

ஊரடங்கை நீட்டிப்பதில் தவறில்லை: எல்.முருகன்

Ezhilarasan

மாட்டுப்பொங்கல்: தமிழகம் முழுவதும் உற்சாகம்

Niruban Chakkaaravarthi

வடமாநில தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

Vandhana