தமிழ் சினிமாவில் உயர் நட்சத்திரங்கள் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாவதும் பின் சில காரணங்களினால் நடிக்க முடியாமல் போவதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.இவ்வாறுதான் ஆடுகளம் ஜரீனாக த்ரிஷா தனுஷுடன் நடித்த அழகிய புகைப்படங்கள் தற்போது இணையதளத்தை கலக்கிவருகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷின் அசத்தலான நடிப்பில் வெளியான திரைப்படம் ஆடுகளம். வெற்றிமாறன் தனுஷ் இணை எப்போதும் ஒரு அதிரடியான இணைத்தான். சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் உள்பட 6 பிரிவுகளில் தேசிய விருதை தட்டிச்சென்றது.
அறிமுக நாயகியாக டாப்ஸி பன்னு நடித்திருந்தார். ஆனால் டாப்ஸி நடித்த ஐரீன் கதாபாத்திரத்திற்கு முதலில் ஸ்ரேயா சரண் நடிக்கவிருந்து சில காரணங்களினால் அவர் நடிக்க முடியாமல் போக த்ரிஷா ஒப்பந்தமாகி தனுஷுடன் சில காட்சிகளும் நடித்துள்ளார்.
அப்போது த்ரிஷா சிம்புவுடன் விண்ணைத்தாண்டி வருவாயா படப்பிடிப்பில் இருந்த காரணத்தால் அவர் தொடர்ந்து நடிக்கமுடியாமல் போனது. அவ்வாறு த்ரிஷா தனுஷுடன் இனைந்து நடித்த அழகிய காட்சிகளின் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் அனைவரின் கவனத்தயும் ஈர்த்துள்ளது.
அந்த புகைப்படங்களில் ஜரீனாக த்ரிஷா நடித்துள்ள காட்சிகள் மனதை கொள்ளையடிக்கும் விதமாக உள்ளது.







