8கி.மீ தோளில் சுமந்து எடுத்து செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள போதமலை மலைக்கிராமத்தில் பல ஆண்டுகளாகவே சாலைவசதி இல்லாத மலைவாழ் கிராமங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தமிழக தேர்தல் பணியாளர்கள் எட்டு கிலோ மீட்டர் தூரம் தோள்களில் சுமந்து சென்றனர்.…

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள போதமலை மலைக்கிராமத்தில் பல ஆண்டுகளாகவே சாலைவசதி இல்லாத மலைவாழ் கிராமங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தமிழக தேர்தல் பணியாளர்கள் எட்டு கிலோ மீட்டர் தூரம் தோள்களில் சுமந்து சென்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட போதமலை பகுதியிலுள்ள கீழூர் மற்றும் கெடமலையிலுள்ள 3 குக்கிராமங்கள் உள்ளன. இங்கு 1,224 வாக்காளர்கள் உள்ளனர்.


இந்த கிராம மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றால் கரடுமுரடான பாதையில்தான் கீழே வரவேண்டும். தங்களுடைய கிராமத்துக்கு பல ஆண்டுகளாக சாலைவசதி கேட்டும் இதுவரை சாலை ஏற்படுத்தப்படவில்லையென்பது மலைவாழ் மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். இந்நிலையில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

2 வாக்குச்சாவடிகள் உள்ள இந்த குக்கிராமத்தில் வாக்குபதிவு இயந்திரத்தை தேர்தல் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கரடு முரடான பாதையில் தோளில் சுமந்தபடி சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு எடுத்துச்சென்றனர். கடந்த 50 ஆண்டுகளாகத் தேர்தல் நடைபெறும் நாளில் வாக்கு இயந்திரங்களைத் தேர்தல் பணியாளர்கள் தோளில் சுமந்தபடி எடுத்துச் செல்வது தொடர்கதையாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.