உடல் நிலை குறித்த மருத்துவர்களின் ஆலோசனையால் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் தேர்தலில் போட்டியிடவில்லை என கட்சியின் பொருளார் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விரும்பாத 4 தொகுதிகளை காலதாமதமாக அதிமுக அளித்ததாக குற்றம்சாட்டினார். சட்டப் பேரவை தேர்தல் கூட்டணியில் சிக்கல் வரக் கூடாது என்பதற்காக அதிமுகவுடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியதாக குறிப்பிட்டார்.
ஆனால் சட்டப் பேரவை தேர்தலில் தேமுதிகவுக்கு 12முதல் 13 தொகுதியில் இருந்து அதிமுக மேலே வரவில்லை. அதிமுக கூட்டணியை வெற்றிக் கூட்டணியாக மாற்றும் பக்குவம் எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை. ஆனால் அவர் தேமுதிகவுக்கு பக்குவமே இல்லை என கூறுகிறார். 2011ம் ஆண்டு விஜயகாந்த் கூட்டணி அமைந்ததால் தான் பிரச்சாரத்திற்கே செல்வேன் என ஜெயலலிதா கூறினார்.அந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற தான் சட்டமன்ற தேர்தல் கூட்டணியை முன்பே பேச வேண்டும் என நான் வலியுறுத்தி பேசினேன். இந்த கூட்டணி சிக்கல் வர கூடாது என்பதற்கு நாங்கள் பல முயற்சியை மேற்கொண்டோம். மார்ச் 19 தேதி விருதாச்சலத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளேன். விஜயகாந்த் கண்டிப்பாக பரப்புரையில் ஈடுபடுவார் என கூறிய பிரேமலதா, உடல் நிலை குறித்த மருத்துவர்களின் ஆலோசனையால் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை என விளக்கம் அளித்தார்” என அவர் கூறினார







