செய்திகள்

தேர்தல் பரப்புரையில் தேநீர் தயாரித்த மமதா பானர்ஜி! வைரல் வீடியோ!!

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி நந்திகிராம் பகுதியில் பொது மக்களுக்கு டீ போட்டுக் கொடுத்துள்ள சம்பவம் அம்மாநில மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் மார்ச் இறுதி தொடங்கி 8 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பரப்புரை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த பரப்புரையின் ஒரு பகுதியாக சாலை ஓர தேநீர் கடையொன்றில், பொது மக்களுக்கு டீ போட்டுக்கொடுத்துள்ளார். நந்திகிராம் தொகுதியில் தனது பரப்புரையின் போது எதிர்பாராத விதமாக ஒரு சாலையோர தேநீர் கடைக்கு சென்ற மமதா 7 காகித குவளைகளில் அவரே டீ தயாரித்து கொடுத்துள்ளார். அவரை சூழ்ந்திருந்த திரிணாமூல் ஆதரவாளர்களுக்கு அந்த டீ வழங்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில், ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. திரிணாமூல் காங்கிரசிலிருந்து இதுவரை 5 எம்.எல்.ஏக்கள் விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். மேலும், தினேஷ் திரிவேதி போன்ற முக்கிய நபர்களும் தனது எம்.பி பதவியை அதிரடியாக ராஜினாமாக செய்து சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். மேலும், திரிணாமூல் அமைச்சராக இருந்த சுவெந்து அதிகாரி அக்கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்தார்.

நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் அவர், மமதாவுக்கு தான் போட்டியிடும் தொகுதியில் போட்டியிட சவால் விடுத்தார். இந்த சவாலை ஏற்ற மமதா, நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து இந்த தொகுதியில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரசும், பாஜகவும் நேரடியாக மோதுகின்றன. இதனால் தேர்தல்களம் அணல் பறக்கின்றது.

Advertisement:

Related posts

விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க முதல்வர் அறிவிப்பு!

Jayapriya

கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொண்ட பின் இரத்த தானம் செய்யலாமா?

Gayathri Venkatesan

மன்மோகன் சிங் உடல் நிலை: சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் விளக்கம்

Karthick