தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்களை திருப்பதிக்கு இணையாக மாற்ற, வரும் 17ஆம் தேதி இந்து அறநிலையத்துறை சார்பில் சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை வேளச்சேரியில் ஆக்கிரமிப்பால் சூழப்பட்டுள்ள வாசுதேவ பெருமாள் கோயிலில் எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, கோயில்களின் வரவு – செலவு கணக்குகள் விரைவில் இணையத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்.
அறநிலையத்துறை இணையதளத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோரிக்கைகளும், மனுக்களாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோரிக்கைகளும் வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்களை திருப்பதிக்கு இணையாக மாற்ற, வரும் 17ஆம் தேதி சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.







