சினிமாவாகிறது கங்குலியின் கிரிக்கெட் வாழ்க்கை: இவர்தான் ஹீரோ?

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான சவுரவ் கங்குலியின் வாழ்க்கை கதை சினிமாவாக இருக்கிறது. விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்களின் வாழ்க்கை கதைகள் சினிமாவாக்கப்படுவது அதிகரித்து…

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான சவுரவ்
கங்குலியின் வாழ்க்கை கதை சினிமாவாக இருக்கிறது.

விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர், நடிகைகள் மற்றும்
பிரபலங்களின் வாழ்க்கை கதைகள் சினிமாவாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. பிரபல
கிரிக்கெட் வீரர்கள் தோனி, சச்சின் டெண்டுல்கர், முகமது அசாருதீன் ஆகியோரின்
வாழ்க்கைக் கதைகளைக் கொண்ட படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப்
பெற்றுள்ளன.

இப்போது 1983 ஆம் ஆண்டு இந்திய அணி, உலக கோப்பையை வென்றதை மையமாக
வைத்து ’83’ என்ற படம் உருவாகி இருக்கிறது. இந்தப் படம் விரைவில் வெளியாக
இருக்கிறது. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கை
கதை, ’சபாஷ் மித்து’ என்ற பெயரில் சினிமாவாகி வருகிறது. இதில் டாப்ஸி நாயகியாக
நடிக்கிறார்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின்
வாழ்க்கை வரலாறும் சினிமாவாக இருக்கிறது. சாதாரண கிரிக்கெட் வீரராக இருந்து
இந்திய கிரிக்கெட் கவுன்சில் தலைவரானது வரையான அவர் வாழ்க்கைக் கதை இந்தப் படத்தில் இடம்பெறும் எனத் தெரிகிறது.

அதற்கான அனுமதியை சவுரவ் கங்குலி வழங்கியுள்ளார். இது தொடர்பாக செய்தி சேனல்
ஒன்றில் பேசிய கங்குலி, தனது வாழ்க்கை கதை படமாவது உண்மைதான் என்றார். அவர்
பிரபல இந்தி நடிகர் ரன்பீர் கபூரை தனது கேரக்டரில் நடிக்க பரிந்துரைத்ததாகவும் மேலும்
2 ஹீரோக்களும் பரிந்துரையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.