முக்கியச் செய்திகள் தமிழகம்

ஊரடங்கு தளர்வுகள் குறித்த ஆலோசனையில் பொது போக்குவரத்துக்கு அனுமதி?

பேருந்து போக்குவரத்தை அனுமதிப்பது உள்ளிட்ட ஊரடங்கு தளர்வுகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவற்காக அமல்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 21ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கினை நீட்டிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொற்று குறைந்த மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்தினை அனுமதிப்பது, வழிபாட்டுத் தலங்களை திறப்பது போன்ற ஊரடங்கு தளர்வுகள் குறித்து நாளை காலை முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர், பொதுத்துறை செயலாளர், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர், காவல்துறை தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்தியாவில் சமூக பரவலாக மாறியது ஒமிக்ரான்

G SaravanaKumar

ஆர்யாவின் கேப்டன் திரைப்படம் எப்படி உள்ளது – விமர்சனம்

Web Editor

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துபாய் பயணம்

G SaravanaKumar