முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சிமெண்ட் விலையைக் குறைக்க பாஜக மாநிலத் தலைவர் முருகன் கோரிக்கை

தமிழகத்தில் சிமெண்ட் விலை அதிகரித்துள்ளதால், விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்படி பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து எல்.முருகன் வெளியிடுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கட்டுமானப்பொருட்களின் விலை கட்டுப்பாடு இல்லாமல் உயர்ந்து விட்டது. திமுக ஆட்சிக்கு வரும் முன்பு ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ.370 ஆக இருந்தது. இப்போது ரூ.520 ஆக உயர்ந்துள்ளது. சிமெண்ட் விலையைத் தொடர்ந்து கட்டுமானப்பொருட்களின் விலைகள் அனைத்தும் உயர்ந்துள்ளன. முன்பு ஒரு லோடு செங்கல் விலை ரூ.18,000 ஆக இருந்தது. இப்போது ரூ.24,000 ஆக அதிகரித்து விட்டது. கடந்த ஒரே மாத த்தில் ஒரு லோடு செங்கல் விலை ரூ.6000 உயர்ந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஒரு யூனிட் எம்.சாண்டின் விலை ரூ.5000 ஆக இருந்தது. இப்போது ரூ.6000 க்கும் அதிகமாக உயர்ந்து விட்டது. கம்பி விலை டன் ஒன்றுக்கு ரூ.18000 ஆக இருந்தது. இப்போது ரூ.75,000 ஆக உயர்ந்து விட்டது.
எனவே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு சிமெண்ட் உள்ளிட்ட அனைத்து கட்டுமானப் பொருட்களின் விலையையும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மு.க.அழகிரியின் ஆதரவாளர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!

Niruban Chakkaaravarthi

கடன்கள் வசூலிப்பில் கீழ்த்தரமாக நடந்தால் கடும் நடவடிக்கை- ஆர்பிஐ ஆளுநர்

Web Editor

கொரோனா மறுபரிசோதனை தேவையில்லை: சுகாதாரத்துறை