உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் தொடர்பான சட்டத்திருத்த முன்வடிவை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்தார். அதில், அரசு இயந்திரம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக மக்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை தணிப்பதற்காக போர்க்கால அடிப்படையில் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் நலன் சார்ந்த நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எனவே மறுசீரமைக்கப்பட்ட 9 மாவட்டங்களில் பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் எல்லைகளை வரையறுப்பதற்கான அறிவிக்கையையும், சாதாரண தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகளையும் திட்டமிட்டபடி நிறைவு செய்ய இயலவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. எனவே, தனி அலுவலர்களின் பதவிக் காலமானது ஜூன் 30-ஆம் தேதி முடிவடையும் நிலையில், அவர்களின் பதவிக்காலம் டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.