நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்க வகை செய்யும் சட்ட முன்வடிவை பேரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக 2016ம் ஆண்டு அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து, சென்னையில் வழக்கு தொடரப்பட்டது. எனவே, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். மேலும் 6 மாதத்திற்கு ஒரு முறை தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் 2019ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டம் தவிர்த்து மீதம் உள்ள மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மறுசீரமைக்கப்பட்ட 9 மாவட்டங்களில் பழங்குடியினர், பெண்களுக்கான இட ஒதுக்கீடாது இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. அதன் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கு முன்னேற்பாடான பணிகளை பூர்த்தி செய்ய கால அவகாசம் தேவைப்படுவதை காரணமாக கூறி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் 6 மாத காலத்திற்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த அதிகாரிகளின் பதவிககாலம் டிசம்பர் 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் ஜீன் 30 வரை அதாவது மேலும் 6 மாத காலத்திற்கு பதவிக்காலத்தை நீட்டித்து சட்டமசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மசோதா நாளைய தினம் நிறைவேற்றப்பட உள்ளது.