கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை அதிகரித்தது தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் உச்சமடைந்து வரும் நிலையில் 2,300 பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று, உலகை உலுக்கி வரும் சூழலில் தற்போது ஒமிக்ரானாக பரிமாணம் அடைந்து மிக வேகமாக…

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் உச்சமடைந்து வரும் நிலையில் 2,300 பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று, உலகை உலுக்கி வரும் சூழலில் தற்போது ஒமிக்ரானாக பரிமாணம் அடைந்து மிக வேகமாக பரவி வருகிறது. மேலும், ஒமிக்ரான் தொற்று சமூக பரவலாக மாறிவிட்டதாக இன்சாகாக் நிறுவனம் தெரிவித்திருந்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளதால் தற்போது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தகவலில், நாள்தோறும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தொற்று பரவலை தடுக்க கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை மீண்டும் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது தமிழக அரசு.

அதில், அதிகபட்சமாக சென்னையில் ஆயிரத்து 868 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்பட தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரத்து 356 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி, கரூர், நாகை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

அண்மைச் செய்தி: 2.85 லட்ச புதிய கொரோனா தொற்று எண்ணிக்கை

மேலும், கள்ளக்குறிச்சி, கரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாரூர், விழுப்புரம், மயிலாடுதுறை, விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை எனவும் அரசு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.