முக்கியச் செய்திகள் கொரோனா

குஜராத்தைச் சேர்ந்தவருக்கு ஒமிக்ரான் தொற்று

ஜிம்பாப்வேயில் இருந்து திரும்பிய குஜராத்தை சேர்ந்த ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உருமாற்றம் அடைந்து, ஒமிக்ரான் என பெயரில் மீண்டும் உலக நாடுகளில் பரவ தொடங்கியுள்ளது. இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும் போது அதிவேகமாக பரவும் தன்மை கொண்டது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ஒமிக்ரன் வைரஸ் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவ தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவிலும் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

ஏற்கனவே, கர்நாடகாவை சேர்ந்த 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது குஜராத்தை சேர்ந்த ஒருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. ஜிம்பாப்வேயில் இருந்து திரும்பிய குஜராத்தை சேர்ந்தவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு ஒமிக்ரான் வைரஸ் உள்ளது தெரியவந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 3ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே மத்திய அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டுமென அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வருவோருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

Advertisement:
SHARE

Related posts

இந்தியாவில் புதிதாக 11,271 பேருக்கு கொரோனா

Halley Karthik

உருவாகிறது புனித் ராஜ்குமார் பயோபிக் ?

Halley Karthik

அறநிலையத்துறையில் தேவையற்ற பணியிடங்களை நீக்க ஆய்வுக்குழு

Halley Karthik