ரேஷன் கடைகளில் வரும் 31ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பை கடந்த நான்காம் தேதி முதல் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. பல இடங்களில் பொதுமக்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில் ரேஷன் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வரும் 31-ம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு என்பதால் பொதுமக்கள் தங்களுக்கு தெரிவிக்கப்படும் நாட்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
பொங்கல் பரிசு வழங்குவதில் ஏதேனும் தவறு ஏற்பட்டாலும் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குறிப்பிட்ட நாளில் பெற முடியாவிட்டாலும் பொங்கலுக்கு முன்பாக கடைக்குச் சென்று பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் விளக்கியுள்ளார்.