அரசு உத்தரவை மீறி நேரடி வகுப்புகள் நடத்தும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக எம்ஐடி கல்லூரி விடுதியில் 67 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் மேலும் 14 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் எம்ஐடி கல்லூரி விடுதி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி, எம்ஐடி கல்லூரி விடுதி மாணவர்கள் 81 பேருக்கு இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதில், 40 மாணவர்கள் பாதுகாப்புடன் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
20ம் தேதி வரை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் தேவைபட்டால் மீண்டும் தேர்வு ஒத்தி வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.