நீட் தேர்வு வேண்டாம் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு வேண்டாம் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாபேட்டையில் உள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் இல்லத்தில் அதிமுகவில் இருந்து விலகிய 50-க்கும்…

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு வேண்டாம் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாபேட்டையில் உள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் இல்லத்தில் அதிமுகவில் இருந்து விலகிய 50-க்கும் மேற்பட்டவர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மருத்துவ படிப்புகான நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கவேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது எனத் தெரிவித்தார்.

நீட் தேர்வு குறித்து முடிவு எடுக்கப்படும்வரை மாணவர்கள் நீட் தேர்வுக்கான கல்வியை கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் கூறினார். மேலும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள ஒன்றிய அரசை நம்பியே இருக்கும் நிலை உள்ளது என்றும் நாளை மறுநாள் டெல்லி சென்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.