மேகதாது அணை குறித்து மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷாகாவத்துடன் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
கர்நாடகாவில் ஜலஜீவன் குடிநீர் திட்டத்தை தொடக்கி வைப்பதற்காக மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷாகாவட் இன்று பெங்களூரு வந்துள்ளார். அவரை வரவேற்ற கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, அவருடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இந்த ஆலோசனையில் சட்டத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். தற்போது காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனையின்போது, மேகதாது அணை திட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் அளிக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.







