முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆளுநராக இருக்கும் தகுதியை இழந்து விட்டார் ஆர்.என் ரவி -முத்தரசன் ஆவேசம்

ஆளுநருக்கான மரியாதையை அவர் இழந்துவிட்டார். எனவே, ஆளுநர் பதவியை உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

ஏ ஐ டி யூசி தொழிற்சங்கத்தின் மாநில மாநாடு நெல்லை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இது தொடர்பான ஆயத்த கூட்டம் நெல்லை சிந்துபூந்துறை இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தொழிலாளர்களுக்கு எதிராக கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாகத் தொழிலாளர் நலச் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்று வருகிறது. மத்திய அரசின் தொழிலாளர் வினோத சட்டங்கள் தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது அமல்படுத்தவும் கூடாது என மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது என தெரிவித்தார்.

ஒரு மாத காலம் நடைபெறும் வாரணாசி தமிழ் சங்கமும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தமிழ் குறித்து உரையாற்றி இருப்பது வரவேற்கத்தக்கது. உலகின் மூத்த மொழி தமிழ் என புகழும் பிரதமர் தமிழுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவர்களில் முக்கியத்துவம் அளிக்கவில்லை. பிரதமரின் உதடு ஒன்று பேசுகிறது உள்ளம் ஒன்று செய்கிறது. மொழியைப் பற்றி உயர்வாகப் பேசிவிட்டு மொழி வளர்ச்சிக்கு பிரதமர் உதவவில்லை. பாரதிய ஜனதா கட்சி இந்தியாவைத் தான் தான் ஆட்சி செய்ய வேண்டும் என விரும்புகிறது. சட்டமன்ற உறுப்பினர்களை ஆடு மாடுகளைப் போல் பாஜகவினர் விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்றார்.

தமிழக ஆளுநரின் பேச்சுக்கள் அரசியல் சாசனத்திற்கு அப்பாற்பட்டு உள்ளது. ஆளுநரின் கருத்துக்கள் மத ரீதியிலா அமைந்துள்ளது. இதனை வைத்து அவரை நீக்கம் செய்திருக்க வேண்டும். மாநில மக்களின் நலன் சார்ந்த இருபதுக்கு மேற்பட்ட மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். மோடி அரசு ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டிசம்பர் 29ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும். ஆளுநர் ரவி அரசியல் கட்சி தலைவரைப் போல் பகிரங்கமாகச் செயல்பட்டு வருகிறார் என விமர்சித்தார்.

ஆறு பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் தனது பணியைச் சரியாகச் செய்யவில்லை என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஆளுநர் தனது மரியாதையை இழந்துள்ளார். ஆளுநர் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடரும். கூட்டணி பலப்படும் அதே வேலையில் மக்கள் நலனுக்காகப் போராட்டங்களையும் இந்திய கம்யூ கட்சி முன்னெடுக்கும் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மத்திய அமைச்சர் அமித்ஷா வருகை உற்சாகத்தை அளிப்பதாக வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி!

Gayathri Venkatesan

புதுவகையான தாவரத்திற்கு சரத் பவார் பெயர் சூட்டப்பட்டது!

Gayathri Venkatesan

விரைவில் ஜப்பானின் நாகனோ நகரில் ஊர்வலமாகக் கொண்டு செல்லவிருக்கும் ஒலிம்பிக் தீபம்!

Halley Karthik