முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அறநிலையத் துறைக்கு சொந்தமான ரூ.500 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்பு: அமைச்சர்

அறநிலையத் துறைக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை வாடகைதாரர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கோயில் சொத்து ஆக்கிரமிப்புகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு,  மீட்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை வடபழனியில் உள்ள ஆதிமூல பெருமாள் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, ஆதிமூல பெருமாள் கோயில் 200 ஆண்டுகள் பழமையானது. இதன் சொத்துக்கள் மூலம் 7.5 லட்சம் ஆண்டு வருமானமாக வருகிறது என்றார். 

ஆளுநர் உரையில் அறிவித்தபடி,  100 கோடி ரூபாயை திருக்கோயில் பணிகளுக்கு முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், 60 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு இந்த கோயிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடைபெற உள்ளதாகவும் குறிப்பிட்டார். 

அறநிலையத் துறைக்கு சொந்தமான 79 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாகவும், 500 கோடிக்கு மேலான சொத்து மதிப்பு உடைய நிலம் மீட்கப்பட்டுள்ளது எனவும், இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் பல நிலங்கள் மீட்கப்படும் என்றும் உறுதிபடத் தெரிவித்த அமைச்சர், அறநிலையத் துறைக்கு சொந்தமான இடங்களில் குழுவாக 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை வாடகை தாரர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு பட்டா வழங்கப்பட மாட்டாது எனவும் கூறினார்.

கடந்த அதிமுக ஆட்சியில் எந்த செயல்பாடும் இல்லை என்பதற்கு அறநிலையத்துறையே சான்று எனவும் அமைச்சர் குற்றம்சாட்டினார். 

Advertisement:
SHARE

Related posts

இந்தியாவில் இதுவரை 8.7 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி!

Halley karthi

சுசில் ஹரி பள்ளிக்கு அழைத்துச் சென்று சிவசங்கர் பாபாவிடம் போலீசார் விசாரணை!

Jeba Arul Robinson

கொரோனா தோற்றம்; அமெரிக்கா மீது விசாரணை தேவை – சீனா வலியுறுத்தல்!

Saravana Kumar