முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

தமிழ்நாட்டில் புதிதாக 1,573 பேருக்கு கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் புதிதாக 1,573 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், 1,56,386 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,573 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கொரோனாவால் 26,05,647 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,797 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 25,52,507 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,788 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக 170 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 209 பேர், குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கோவையில் 181 பேருக்கும்,  ஈரோட்டில் 130 பேருக்கும், செங்கல்பட்டில் 90 பேருக்கும், தஞ்சாவூரில் 84 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் கொரோனா தொற்றுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

“உதயநிதி ஸ்டாலின் வந்தால் தான் கீழே இறங்குவேன்”பெண் தற்கொலை மிரட்டல்

Vandhana

இலங்கை பேட்டிங்: இந்திய அணியில் சூர்யகுமார், இஷானுக்கு வாய்ப்பு

Vandhana

திறக்கப்பட்டது தாஜ்மஹால்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

Vandhana