“உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்”

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் முடிவெடுப்பார் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில்…

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் முடிவெடுப்பார் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, வீடுகளுக்கே சென்று குடிநீர் வழங்கும் திட்டம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒப்புதலை பெற்று செயல்படுத்தப்படும் எனக் கூறினார்.

மேலும், மாநகர திட்டங்களை நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அமைச்சர் நேரு, உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக, முதலமைச்சர் முடிவெடுப்பார் எனவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.