நியாய விலைக்கடையில் முதலமைச்சர் திடீர் ஆய்வு!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாய விலைக்கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாட்டில், இரண்டாம் கட்டமாக கொரோனா நிவாரண நிதி 2 ஆயிரம் ரூபாயும், 14 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய மளிகை…

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாய விலைக்கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாட்டில், இரண்டாம் கட்டமாக கொரோனா நிவாரண நிதி 2 ஆயிரம் ரூபாயும், 14 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பும் நியாய விலைக்கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாய விலைக்கடையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நிவாரண நிதி மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்புக்கள் முறையாக வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்த அவர், பொதுமக்களுக்கு விரைவாக வழங்கும்படி, நியாய விலைக்கடை ஊழியர்களை அவர் அறிவுறுத்தினார்.

பின்னர், பயனாளிகள் சிலருக்கும் நிவாரண நிதி மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்பை அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.