பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் சமூக விரோத செயல்கள் நடப்பதாக புகார்

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில், இரவு நேரத்தில், சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அங்கே…

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில், இரவு நேரத்தில், சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், அங்கே சிலர் அமர்ந்து மது அருந்துவதாகவும் கூறப்படுகிறது. இதனால், பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் ஆங்காங்கே, மதுபாட்டில்கள் சிதறிக் கிடக்கின்றன.

அங்கு பணிக்கு வரும் அதிகாரிகளும், ஊழியர்களும் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறும் முன், டிபிஐ வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து, சமூக விரோதிகளின் நடமாட்டத்தை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.