முக்கியச் செய்திகள் தமிழகம்

தனியார் பள்ளிகளில் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்!

தனியார் பள்ளிகளில் 75 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா 2வது அலை பரவல் காரணமாக நடப்பாண்டுக்கான வகுப்புகளும் ஆன்லைன் மூலமே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பிற்கு 75 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பல பள்ளிகளில் முழு கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், சிபிஎஸ்இ, மெட்ரிக், ஐசிஎஸ்இ, ஐஜிசிஎஸ்இ, ஐபி பள்ளிகளில் 75 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும், கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ராஜஸ்தான் அணிக்கு செக்: பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்கும் டெல்லி!

Halley Karthik

ஐதராபாத் அணிக்கு எதிராக அபார பந்துவீச்சு – சென்னைக்கு 135 ரன்கள் இலக்கு!

G SaravanaKumar

இந்தோனேஷியாவில் ரீமேக் ஆகிறது மோகன்லாலின் ’த்ரிஷ்யம்’

EZHILARASAN D